🔴 VIDEO தையிட்டியிலிருந்து கிளம்பிய கலகம் அடக்கும் பொலிஸார் – தீர்வு கிடைக்குமா?

புதிய இணைப்பு

சட்டவிரோத யாழ்.தையிட்டி திஸ்ஸ ராஜமாகா விகாரையை அகற்ற கோரி நேற்று மாலை ஆரம்பமான போராட்டம் சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது.

இன்றைய தினம் போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலகம் அடக்கும் பொலிஸார் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் போராட்டம் அமைதியான முறையில் இடம்பெற்றிருந்தது.

அத்தோடு இன்றையதினம் தையிட்டி விகாரைக்கு வழிபாட்டுக்காக அதிகமான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வழமைபோன்றே பக்தர்கள் வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு

வரலாற்று சிறப்பு மிக்க பல பௌத்த ஆலயங்கள் இருக்கும் போது அவற்றையெல்லாம் விட்டு தையிட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றால் இவர்கள் தமிழ் சிங்கள் இனங்களுக்கிடையில் கலவரத்தை உண்டாக்கி அதில் குளிர்காய பார்க்கிறார்கள் என தையிட்டியில் போரட்டத்தில் ஈடுபட்டுள்ள தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அது தொடர்பான வீடியோவை இற்கு காணலாம்

முதல் இணைப்பு

யாழ். தையிட்டி பகுதியில் உள்ள திஸ்ஸ விகாரையானது சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்து அப்பகுதியில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த போராட்டம் நேற்று ஆரம்பமான நிலையில் இன்றும் (10) இடம்பெற்று வருகின்றது.

இந்தநிலையில் இன்று காலை முதல் குறித்த இடத்தில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு மேலும், நீர்த்தாரை பிரயோகத்திற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் போராட்டம் செய்ய வேண்டாம் என்று நேற்றையதினம்(9) நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட 27 பேருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!