முல்லைத்தீவில் நிறம்மாறும் பாறைகள்

இயற்கை அன்னையின் அரியபடைப்பான புலிபாய்ந்தகல் கடற்கரையின் அமைவும் அழகும் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துவதோடு சுற்றுலா பயணிகள் மனதில் அமைதியான நிலையை உருவாக்கும் தன்மை கொண்டதாக அமைந்துள்ளது.

கடலை சுற்றி நிறம் மாறும் கற்பாறைகளும், கடற்கரைகளில் பரந்து விரிந்திருக்கும் சிறு சிறு பச்சை தரைகளும், வித்தியாசமான வடிவிலான முருகை கற்பாறைகளும், கடலுக்கு அருகேயே பரந்த வனப்பகுதியும், மணல் தரையும் கொண்டு சிறு குடாவாக காட்சியளிக்கின்றது.

இது முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொக்குளாய் வடக்கிற்கும், நாயாற்று பகுதிக்கும் இடைப்பட்டு 21ஆவது மைல்கல் அமைவிடத்திற்கு அருகே செல்லும் வீதியில் அமைவு பெற்றுள்ளது.

புலிபாய்ந்தகல் கடல் பகுதியில் அமைந்துள்ள சிவப்பு கற்பாறை ஒன்றில் புலி பாய்ந்த கால்தடம் பதிவாகி இருப்பதனாலேயே புலிபாய்ந்த கல் என பெயரிடப்பட்டிருப்பதும், குறித்த கடற்பகுதியில் கனிய வளங்கள் (இல்மனைற்) இருப்பதும் சிறப்பம்சமாகும்.

கடலின் மேற்பகுதியில் மலைநாட்டு இயற்கை தாவர அமைப்பும் , அருகாமை அடர்த்தியான வனமும் இருக்கின்றது.

சுற்றுலா பயணிகள் சிறு குடில் அமைத்து உணவு சமைத்து உண்ணக்கூடிய இட அமைவும், மகிழ்ச்சியான தருணங்களை இனிமையாக புகைப்படம் எடுத்து களிக்ககூடிய இடமாகவும், பார்பவர்கள் மனதிற்கு புத்துணர்ச்சி தர கூடிய அமைதியான இடமாகவும், சிறுவர்கள் விளையாடக் கூடிய சுத்தமான மணல் மேடுகளை கொண்டதாகவும், கனிய வளங்களை மணல் தரையில் காணக்கூடிய இடமாகவும் இருக்கின்றது.

மிக ஆழமானதும் மிக பரந்த கடற்பகுதியாக இருக்கும் அதே நேரம், கடல் அலைகளின் தாக்கம் குறைவானதாகவும் இருக்கின்றது.

கடற்கரைகளில் இருக்கும் பாறைகளில் அலை பட்டு தெறிக்கும் போது சிவப்பு நிறமான பாறைகளின் நிறம் கபிலநிறமாக காட்சியளிக்கும் அற்புதமான காட்சி மிக அருமையானது.

கற்பாறைகளில் அலைமோதி தெறிக்கும் அழகையும், சூரியன் மறையும் காட்சியும், கடல் அலைகளுடன் அலை புரண்டு கரை சேரும் நண்டுகள் மணல்தரை கரைக்கு வரும் நண்டுகள் வரையும் சித்திரமும் மிக அற்புதமானது.

இயற்கை அழகை ஒரே நேரத்தில் பார்க்கவும், இரசிக்கும் வகையில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் இலங்கையில் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தரை, கடல், பாறைகள், வனம்,கனிய வளம் என அனைத்து இயற்கை படைப்புக்களையும் உள்ளடக்கிய சிறு குடாவாக அமைவு பெற்றிருப்பதே புலிபாய்ந்தகல் கடற்கரையின் சிறப்பம்சம்மாகும்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

news
மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன்!
611c7164-847f-4dd5-bc75-86bf7e441f3d
யாழில் அதிகாரிகளின் கவனயீனத்தால் ஏற்படபோகும் உயிராபத்து?
Gu2-vP9XAAADiza
கண் மூடி திறப்பதற்குள் 26,000 அடி சரிந்த விமானம்.. கண்ணீர் விட்டு கதறிய பயணிகள்! திக்திக் சம்பவம்
batticalo
வானிலிருந்து பூமழைபொழிய.. தமிழர் பகுதியில் கேட்ட ஆரோகரா கோசம்
jaffna
கராத்தே சுற்றுப் போட்டியில் யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சாதனை!
vavuniya-train-accident
ஓமந்தையில் புகையிரதம் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: தாயும் மகளும் படுகாயம்