சரத் குணவர்தனவுக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறை; கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஊழல் குற்றச்சாட்டில் கையூட்டல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட நான்கு வழக்குகளில் குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் ஒவ்வொரு வழக்கிலும் தலா நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேலும் அதே வழக்குகளுக்காக முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு ரூ. 18 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹைல் இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

கடந்த 2006ஆம் ஆண்டு தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், அந்த நிறுவனத்திற்கு வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக, “ஊழல்” குற்றச்சாட்டின்கீழ் கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!