பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிவித்தல்:வளிமண்டலவியல் திணைக்களம்

மேல், சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (05) நண்பகல் 12.15 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தல் இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த அறிவித்தல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, கீழே உள்ள புகைப்படத்தில் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும், மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்