மட்டக்களப்பில் கூரிய ஆயுத்ததினால் தாக்கப்பட்டு ஆசிரியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வாழைச்சேனை காவல் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தப்படும் காட்சிகள், சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீண்ட காலமாக நிலவி வந்த தகராறு ஒன்று தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதாலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த ஆசிரியர், சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், தாக்குதலை நடத்திய சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
