வீட்டு வாசலில் கைவிடபட்ட நிலையில் கிடந்த பை: திறந்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார பெண் உத்தியோகத்தரின் வீட்டு வாசலில் கிடந்த பைக்குள் இருந்து குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மஹவ பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம், இப்பலோகம மஹவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிறந்து ஒரு நாளேயான குழந்தை ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விசாரணையில் தெரியவருவதாவது,

இப்பலோகம மஹவ பிரதேசத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார பெண் உத்தியோகத்தரின் வீட்டு வாசலில் பை ஒன்று கிடந்துள்ளது.

இதனை அவதானித்த ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார பெண் உத்தியோகத்தர் அந்த பையை சோதனையிட்டு பார்த்த போது பைக்குள் குழந்தை ஒன்று உயிருடன் இருந்துள்ளது.

இதனையடுத்து ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார பெண் உத்தியோகத்தர் அந்த குழந்தையை நிக்கவெரெட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

பிறந்து ஒரு நாளேயான குழந்தை ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

குழந்தையை வீட்டு வாசலில் யார் விட்டுச் சென்றது என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

negombo prison
நீர்கொழும்பு சிறை வன்முறைச் சம்பவம்: ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசேட குழு
gotabaya rajapaksa
கைதுக்கு எதிரான கோட்டாபயவின் மனு: உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரிக்கை
arrest
சென்னையிலிருந்து நாடு கடத்தப்பட்ட குற்றவாளிக்கு போலி கடவுச்சீட்டு: குடிவரவு திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர் கைது!
negombo prison issue
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: காயமடைந்த 4 அதிகாரிகள் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றம்!
negombo prison
மோதல்களினால் இரத்தக் களரியான நீர்கொழும்பு சிறைச்சாலை: கட்டுக்கடங்காத வன்முறையின் பின்னணி
negombo prison
நீர்கொழும்பு சிறைச்சாலையில் பயங்கர மோதல்: அதிகாரிகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு; 50 பேர் வரை காயம்!