தண்டவாளத்தைக் கடக்கும் போது தொடருந்து மோதி ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூரில் இடம்பெற்றுள்ளது.

தொடருந்து மோதியதில் உடல்கள் சிதைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறு அவர் உத்தரவிட்டார்.
