மகனின் திருமணம் ஒத்திவைப்பு, நெதன்யாகுவிற்கு கடும் எதிர்ப்பு.

”தனது மகனின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டமை, இஸ்ரேல் – ஈரானுக்கு இடையே இடம்பெற்றுவரும் போருக்கு தான் கொடுத்த விலை” என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார்.

இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக கடந்த 16ஆம் திகதி நடைபெற இருந்த பிரதமர் நெதன்யாகுவின் மகன் அவ்னர் நெதன்யாகுவின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக காசாவில் இஸ்ரேலியர்கள் பணயக்கைதிகளாக உள்ள நிலையில், நாட்டின் பிரதமர் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதா? என விமர்சனங்கள் எழுந்தன. இதன் காரணமாக நெதன்யாகு மகனின் திருமணத்தை தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், ஈரானின் ஏவுகணை தாக்குதலில் பாதிக்கப்பட்ட சொரோகா மருத்துவமனையை பெஞ்சமின் நெதன்யாகு நேரில் சென்று பார்வையிட்டார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் ” பலர் தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்து வாடுகின்றனர் எனவும், தனது குடும்பமும் இதற்கு விதிவிலக்கு அல்ல எனவும், தனது மகனின் திருமணமும் ஒத்திவைக்கப்பட்டது எனவும் அது போருக்காக நாங்கள் கொடுத்த விலையாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் திருமணம் ஒத்திவைக்கப்பட்டதால் தனது குடும்பத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், ஒரு வீராங்கனையை போல் எனது மனைவி இந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொண்டார்” என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் போரின் யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் நெதன்யாகு தன்னைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்று பலரும் விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தகக்து.

youtube

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!