இலங்கை: 2 மில்லியன் சாரதி அனுமதிப் பத்திரங்களை ரத்து?

2009 ஆம் ஆண்டுக்கு முன்பு வழங்கப்பட்டு, புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் ரத்து செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பரிந்துரை மற்றும் கோரிக்கைகள் பொலிஸ் திணைக்களம் ஊடாக பொலிஸ்மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமே இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டியவர் என்பதால், இது தொடர்பாக விரைவில் அந்தத் திணைக்களம் ஒரு தீர்மானத்தை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கையில் தற்போது ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுள்ளதுடன், அதில் 4 மில்லியனுக்கும் அதிகமானோர் 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு பெற்ற சாரதி அனுமதிப்பத்திரங்களை வைத்துள்ளனர்.

இவற்றில், இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரங்கள் வைத்துள்ளதால் அவற்றைப் புதுப்பிக்க வேண்டியது கட்டாயம் இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு பெறப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்களை ரத்து செய்யும் புதிய சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

school
பாடசாலையில் மாணவனின் அடாவடியால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!
New Project t (5)
110 வயதான இலங்கையின் மிக வயதான நபர்!
New Project t (3)
பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
New Project t (2)
நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!
New Project t (27)
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
New Project t (26)
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!