2026 ஆம் ஆண்டில் சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கும் ஓய்வு பெற்றதன் பின்னர் வசிப்பதற்கும் மிகவும் மலிவான ஐந்து இடங்களில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவை தளமாகக் கொண்ட இன்டர்நஷனல் லிவ்விங் (International Living) என்ற சஞ்சிகை உலக நாடுகளை பகுப்பாய்வு செய்து இந்த விடயத்தினை அறிவித்துள்ளது.
இது தவிர, உலகளாவிய ஓய்வூதிய குறியீட்டின் வாழ்க்கைச் செலவுப் பிரிவில் இலங்கைக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.
சுகாதாரம், குடிவரவு நுழைவு நடைமுறைகள் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றுடன் வாழ்க்கைச் செலவுகளையும் அடிப்படையாக கொண்டே இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மலிவான உள்ளுர் போக்குவரத்து வசதி மற்றும் வெளிநாட்டவர்கள் எழிதில் பெறக்கூடிய ஓய்வூதிய நுழைவு அனுமதிகள் காரணமாக இலங்கை முதன்மை தெரிவாக இருக்கின்றது.
இலங்கையில் ஒரு தம்பதியினர் மாதம், 2 ஆயிரத்து 200 அமெரிக்க டொலர் செலவில் முறையாக வாழமுடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மிகவும் ஆடம்பரமாக வாழ ஆயிரம் அமெரிக்க டொலர்களை செலவு செய்து சிறப்பான முறையில் வாழ முடியும் எனவும் இன்டர்நஷனல் லிவ்விங் (International Living) சஞ்சிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
