வெளிநாட்டு Client தங்கள் அலுவலகத்திற்கு வந்தபோது, அவரை நடனமாடி வரவேற்ற இந்திய ஊழியர்களின் வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.
அந்த வீடியோவில் தெலுங்கு மற்றும் இந்தி பாடல்களுக்கு ஊழியர்கள் நடனமாடுகின்றனர். இதை பார்த்து வெளிநாட்டு Client ஈர்க்கப்படுகிறார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, ஊழியர்கள் அலுவலகத்தில் நடனமாடி வெளிநாட்டு Client -ஐ வரவேற்க கட்டாயப்படுத்தப்படுகிறார்களா? நடனமாடாத ஊழியர்கள் பழிவாங்கப்படுகிறார்களா? என்று நெட்டிசன்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். மேலும் நிறுவனங்கள் இந்த மோசமான நடைமுறையை நிறுத்த வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
This is super cringe. Super, super cringe. And these women or girls, or whatever… oh god. I hope they find some honor, some self-respect. Stop treating Europeans as gods. However, they must first start thinking more positively about themselves. pic.twitter.com/3cPuy2y5A5
— Jayant Bhandari (@JayantBhandari5) July 22, 2025