உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மைத்ரிக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை ரத்து!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காததன் மூலம் இடம்பெற்ற குற்றவியல் ரீதியான கொலை தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த அழைப்பாணையை செல்லுபடியற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் ரிட் கட்டளை பிறப்பித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பை வழங்கிய ஐந்து பேர் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் இந்த உத்தரவை அறிவித்தது.

எவ்வாறாயினும், புதிய சாட்சியங்கள் ஏதேனும் முன்வைக்கப்படும் பட்சத்தில், கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள குறித்த வழக்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இந்தத் தீர்ப்பு தடையாக அமையாது என்றும் நீதியரசர்கள் ஆயம் தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

crime
கொழும்பின் புறநகர் பகுதியில் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட யுவதி!
namal
நாமல் ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
tiktok
இலங்கையில் டிக்டொக் நட்பால் நடந்த விபரீதம்!
srilanka
இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடையா?
gold price
உலக சந்தையில் வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!
gold price
இலங்கையில் இன்று 4 இலட்சத்தை கடந்தது தங்க விலை!