கும்புக்கனை பகுதியில் வெள்ள நீரைக் கடக்க முயன்றதன் மூலம் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்த மொனராகலை – கொழும்பு பேருந்து தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

பேருந்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் கடந்த 03 ஆம் திகதி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் முன்னிலையாகினர்.
அதன்படி அவர்களின் தவறான நடத்தை குறித்த விசாரணையைத் தொடர்ந்து, பேருந்து வழித்தட அனுமதி இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், நடத்துனர் மற்றும் ஓட்டுநர் ஒரு மாத காலத்திற்கு சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
