ஆங்கிலத்தில் தாய் ஒருவர் பேசியதையடுத்து “தமிழ்ல பேசு அம்மா” என மகன் ஒருவர் புலம்பிய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த நெகிழ்ச்சிச் சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
வீட்டில் இரு பிள்ளைகளுக்குத் தாயொருவர் பாடம் சொல்லிக் கொடுத்துள்ளார். அதன்போது அவரது இளையமகன் திடீரென தாயருகே சிணுங்கியபடி வந்தார்.
இவளுக English இம்சைக்கு அளவேயில்ல.
— BINDU-ബിന്ദു. (@_BindhuR_) August 17, 2025
"ஒழுங்கா பேசுமா",
"என்னம்மா பிரச்சனை உனக்கு"
எவ்ளோ மனசு கஷ்டம்ல கேக்குறான்.
ஸ்கூல்லயும் pressure ,
வீட்டுலயும் pressure .
பாவம் பையன்🥺.
அம்மாக்கும், teacher க்கும் different தெரியாத இவ எல்லாம்.. pic.twitter.com/ZP3CgyNjIK
அவ்வேளை தாய் மகனைப் பார்த்து what’s your problem என ஆங்கிலத்தில் கேட்டுள்ளார். அதற்கு மகன் உடனே “தமிழ்ல பேசு அம்மா” என்று சிணுங்கியவாறு அழ ஆரம்பித்து விட்டார்.
தாய் திரும்ப திரும்ப ஆங்கிலத்தில் பேச அவரது மகன் “தமிழ்ல பேசு அம்மா”, “தமிழ்ல பேசு அம்மா” என்று கத்திக் கூச்சலிட்டு அழுதுள்ளார்.
இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களைக் கவர்ந்து வைரலாகியுள்ளது.