மட்டக்களப்பு சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பித்து ஓடிய சிறுவர்கள்!

மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த இரு சிறுவர்கள், இல்ல நிர்வாகத்திடம் தெரிவிக்காமல் வெளியேறிய சம்பவம் நேற்று (19) இடம்பெற்றுள்ளது.

இவர்கள் கல்முனையில் உள்ள உறவினரைப் பார்க்கும் ஆசையில் தங்களது இல்லத்திலிருந்து வெளியேறி, பேருந்து ஒன்றில் ஏறி சென்றுள்ளனர். இருப்பினும், அவர்கள் பயணித்த பேருந்து மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் அவர்களை இறக்கிவிட்டது.

பாதுகாப்பற்ற சூழலில் சுற்றித்திரிந்த சிறுவர்களை பொதுமக்கள் கண்டுபிடித்து, உணவு வழங்கி, முகநூல் பதிவுகள் மூலமாக தகவல் பரப்பியதன் பின்னர், பொலிஸார் மற்றும் இல்ல அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவர்களை மீட்டுள்ளனர்.

யார் இவர்களின் பெற்றோர்? ஏன் அவர்கள் இதுவரை தொடர்புகொள்ளவில்லை?
என்ன காரணத்தால் இவர்கள் இல்லத்தில் வாழ நேர்ந்தது?எனப்து போன்ற கேள்விகள் எழுந்துள்ளது.

இதேவேளை வறுமை, போதைப்பழக்கம், பெற்றோர் இடையிலான சண்டை, பிரிவு மற்றும் மரணங்கள் போன்ற காரணங்களால் சமூகத்தில் சின்னஞ்சிறு குழந்தைகளை நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.

youtube

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!