ஒடிசாவின் போலங்கிர் மாவட்டம் டிட்லாகர் பகுதியில், 12 வயது பூபேஷ் என்பவர் தனது 6 வயது தம்பியை கொடூரமாக கொலை செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். தம்பி பிறந்த பிறகு பெற்றோரின் அன்பு தமக்குக் குறைவாக இருப்பதாக எண்ணிய மூத்த சகோதரன், பொறாமை மற்றும் கோபம் காரணமாக இந்த கொலைச்சம்பவம் ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலிஸ் விசாரணையில், பூபேஷ் தம்பியை விரும்பாததையும், வீட்டில் அடிக்கடி சண்டைகள் நடந்து வந்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார். சம்பவ நாள், இருவருக்கிடையில் ஏற்பட்ட சண்டையின் போது, சமையலறையில் இருந்த 6 அங்குலம் நீளமான கத்தியை பயன்படுத்தி தம்பியின் கழுத்தில் குத்தியதாகவும் கூறினார். இதன் பின்னர் உடலை வீட்டின் பின்னாலே புதைத்துள்ளார்.
பின்னர் குடும்பத்தினர் தூங்கிய பிறகு இரவு 1 மணியளவில், தாயின் புடவையின் உதவியுடன் பூபேஷ் உடலை வீட்டுப் பின்புறத்திலிருந்து தோண்டி எடுத்தார். பின்னர், சுமார் 300-400 மீட்டர் தொலைவில் வேறு இடத்தில் உடலை மறைத்து புதைத்துள்ளார். தாயின் சந்தேகம் மற்றும் விசாரணை தொடர்ந்து இந்த கொடூரம் வெளிச்சம் பெற்றது. இந்தநிலையில் குற்றவாளி சிறார் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.
இந்த கொலை வழக்கின் ஒவ்வொரு அம்சத்தையும் பொலிசார் மிகுந்த தீவிரத்துடன் விசாரித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.