கார் மற்றும் முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்து! அதிகாலையில் நடந்த பயங்கரம்!

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை டிரேட்டன் பகுதியில் கார் ஒன்றும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் நான்கு பேர் காயங்களுக்கு உள்ளாகி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இந்த 17.07.2025.வியாழக்கிழமை காலை 8 30மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த காரும் கொழும்பில் இருந்து நுவரெலியா பகுதியை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதி உட்பட நான்கு பேர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டியின் சாரதிக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டதன் காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

power cut
நாடு முழுவதும் மின் தடை! விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
srilanka 2000 rupe
போலி ஆவணங்களை சமர்ப்பித்து வங்கியில் பணமோசடி
Ranil in hospital
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில்
vijay
போலி ‘likes’ காட்டி தமிழக மக்களை ஏமாற்றியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்!
News
பொது இடங்களில் வெற்றிலை எச்சில் துப்பினால் சட்ட நடவடிக்கை – அதிகபட்சம் ரூ.25,000 அபராதம்
newsss
“சாக போறேன்… சந்தோசமா?” – ஒரு மெசேஜில் முடிந்த புதுமண வாழ்க்கை!