ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்தசுதாகரின் மனைவி கடந்த 2018 ஆம் ஆண்டு கணவரின் பிரிவால் நோயுற்ற நிலையில் மரணமானார்.

இதனால் அநாதரவாக நிர்க்கதியாக நின்ற பிள்ளைகளை வயதான காலத்திலும் பராமரித்து வந்த பேத்தியாரான கமலா (வயது 75) என்பவர் நோயுற்று கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிற்சை பலனின்றி நேற்று புதன்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் வைத்திசாலையில் பார்வையிட்டு வந்த நிலையில் இத்துயரச் செய்தி இரவு வந்தது.
தந்தையார் சிறையில் வாடுகின்ற நிலையில், பேத்தியும் இவ்வாறு உயிரிழந்த சம்பவம் சிறுவர்களாக இருக்கும் ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளுக்கு மாத்திரமின்றி தமிழ் மக்களுக்கு ஒரு பேரதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
