விபத்திற்குப் பின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்படவிருந்த முதல் விமானம் இரத்து!

அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி இன்று ( 17) புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்ப சிக்கலால் இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இது, கடந்த வாரம் அகமதாபாத்தில் இடம்பெற்ற பேரழிவான விமான விபத்திற்குப் பிறகு, அதே நகரத்தில் இருந்து லண்டன் செல்லவிருந்த முதலாவது விமானமாகும். எனவே, இதற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

விமானம் புறப்படவிருந்த நேரத்துக்கு முன், பராமரிப்பு பரிசோதனையின் போது Boeing 787-8 Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உடனடியாக விமானம் பயணத்திலிருந்து வாபஸ் பெறப்பட்டது.

இதனால் முன்பதிவு செய்திருந்த பயணிகள் இடர்பாடுகளை எதிர்கொண்டனர். ஏராளமான பயணிகள் விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்து விரக்தியடைந்தனர்.

இதேவேளை, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களைச் சேர்ந்த பல விமானங்கள் அண்மைக்காலமாக தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

youtube

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!