அம்பாறையில் மீண்டும் ஆரம்பமானது எரிபொருள் வரிசை: பொதுமக்கள் கடும் அவதி!

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிகிறது.

குறிப்பாக அம்பாறையில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்னால் நேற்று (14) வியாழக்கிழமை மாலை முதல் இன்று வெள்ளிக்கிழமை காலை வரை நீண்ட வாகன வரிசை காணப்படுகின்றது.

சில பகுதிகளில் நேற்று இரவு மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

தற்போது எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், எரிபொருள் நிலைய உரிமையாளர்களே திட்டமிட்டு மீள வாகன வரிசையை ஏற்படுத்தியுள்ளனர் என மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சிலர் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி மீண்டும் எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். எனினும் சில எரிபொருள் நிலையங்களில் தேவையான எரிபொருள் தொடர்ச்சியாக எவ்வித தடையும் இன்றி விநியோகிக்கப்படுகிறது.

இது தவிர எரிபொருள் விலை அதிகரிக்கலாம் என்பதற்காக ஒரு சில எரிபொருள் நிலையங்களில் இவ்வாறு வரிசைகள் உருவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்