பிறந்த சிசு ஒன்றை தொப்புள் கொடியுடன் வயலுக்குள் தாயொருவர் விட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்தக் கொடூர சம்பவம் குருநாகல் மாவட்டம் பரஹதெனிய சிங்கபுரத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
சிங்கபுரம் பகுதியில் தாயொருவர் சிசுவைப் பிரசவித்து தொப்பிள் கொடியுடன் அப்பகுதியிலுள்ள வயல் வெளிக்குள் உள்ள மரத்தின் கீழ் விட்டுச் சென்றுள்ளார்.
சிசுவொன்று அங்கு உள்ளதென்பதை அறிந்த அப்பகுதி மக்கள் உடனே பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.
வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அப்பகுதி மக்களின் உதவியுடன் சிசுவை மீட்டனர். சிசுவை தூக்கும் போது சிசு அழும் காட்சி காணொளி வழியாக வெளியாகி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
சிசுவை மீட்ட பொலிஸார் உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிசுவிற்கு உடனடியாக உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. குறித்த சிசு மருத்துவமனையில் பொலிஸாரின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றது.
சிசுவை தொப்பிள்கொடியுடன் வயலிற்குள் விட்டுச் சென்ற கொடூர தாய் யார் என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.