மூன்று மாத குழந்தைக்கு இழைக்கப்பட்ட அநீதி! யாழில் வெடித்த போராட்டம்!

செம்மணி புதைகுழிக்கு நீதியான விசாரணை நடாத்தபடவேண்டும் உண்மை கண்டறியபடவேண்டும் என கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

இதன் போது குறித்த பகுதியில் அதிகளவான பொலசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

குறித்த போராட்டமானது இலங்கை அரசே எம்மிடம் இருந்த வலிந்து அபகரிக்கபட்டு படுகொலை செய்யப்பட்டு மனித புதைகுழிகளில் புதைக்கப்பட்ட எமது அன்புக்குரியோரின் பெறுமதி மிக்க நீதி கோருகின்றோம் எனும் தொனிப்பொருளில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் செம்மணியில் இன்று காலை 10 மணிமுதல் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீதி வேண்டும் நீதி வேண்டும் செம்மணி படுகொலைக்கு நீதி வேண்டும்,இது மண்ணல்ல புதை உண்மை அதை தோண்டி காட்டுவோம் , ஐநா செவி கொடு ஜனாதிபதி கண்விழி மனித உரிமையை பாதுகாப்பீர் ,புதைகுழிகள் அடைக்கலம் அல்ல உண்மை பேசும் தளங்கள், விசாரணையை துரிதபடுத்து ,செம்மணிக்கா ஒரு நீதி பட்டலந்தவுக்கு ஒரு நீதியா ஆகிய கோஷங்களை எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை ”மூன்று மாதப் பிஞ்சு குழந்தையை மூச்சு அடக்க கொன்றுபுதைத்தது ஏன்?”, ”சித்துபாத்தியில் சிந்தப்பட்ட இரத்ததிற்கு நீதி எப்போது?”, ”காணாமல் போனவர்கள் நினைவாக செம்மணியில் நீதிக்காக நிற்கிறோம்”, ”பதுக்கப்பட்ட உண்மை வெளிக்கொண வேண்டும்” போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் பொழுது பாதிக்கப்பட்ட தரப்பினர் பொதுமக்கள் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் மதகுரு தலைவர்கள் அரசியல் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கடமைகளுக்காகவும் செம்மணி புதைகுழி பாதுகாக்கும் முகமாகவும் அதிகளவு பொலிசார் போராட்டகளத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

youtube

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!