கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட யாழ். நபர்: விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் நேற்றைய தினம்(23) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்கள் குறித்து பொலிஸாரால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேகநபரே இவ்வாறு கைதாகியுள்ளதாக தெரியவருகிறது.

யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியை சேர்ந்த குறித்த சந்தேகநபர் நீண்ட காலமாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு முயன்ற வேளையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கோண்டாவில் பகுதியிலிருந்து கைக்குண்டொன்றும், இரு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!