பெண்ணின் வயிற்றில் 30 வருஷமா இருந்து கல்லாக மாறிய குழந்தை! மெய்சிலிர்க்கும் அதிசயம்

அல்ஜீரியாவைச் சேர்ந்த 73 வயது பெண்ணின் வயிற்றில் 30 ஆண்டுகளாக இருந்த கல்சியமடைந்த சிசு சமீபத்தில் மருத்துவ பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செய்தி, ஜூன் 25 ஆம் தேதி Non Aesthetic Things என்ற X பக்கம் பகிர்ந்த CT ஸ்கேன் படத்தின் மூலம் பரவலாக பேசப்பட்டது.

கல்சியமடைந்த குழந்தையா?

இந்த நிலைமை மருத்துவ ரீதியில் ‘லிதோபீடியான்’ (Lithopedion) என அழைக்கப்படுகிறது. இது கருப்பையின் வெளியே, வயிற்றுப் பகுதியில் உருவான கர்ப்பமாகும். சிசுவிற்கு தேவையான ரத்த ஓட்டம் இல்லாததால் அது வளராமல் இறந்துவிடுகிறது. ஆனால் சிசுவை உடலிலிருந்து வெளியேற்ற முடியாத நிலை ஏற்படும்போது, மனித உடல் அதனை பாதுகாப்பு செயல்முறையின் கீழ் மெதுவாக கல்சியமாக கல்லாக்கி பாதுகாக்கிறது.

பல ஆண்டுகள் அறியப்படாமல் போனது எப்படி?

மருத்துவ வல்லுநர்கள் கூறுவதாவது, இந்நிலையில் பாதிக்கப்படுபவர்கள் வலியும், எச்சரிக்கையான அறிகுறிகளும் இல்லாமல் இயல்பாக வாழ்வதால், இது பல ஆண்டுகள் கண்டறியப்படாமல் இருக்கிறது. மருத்துவ வரலாற்றில் இதுபோன்ற 300க்கும் குறைவான சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. 2013ஆம் ஆண்டு கொலம்பியாவில் 82 வயது பெண்ணிடம் 40 ஆண்டுகள் வயிற்றில் சிசு இருந்தது என கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த தகவல் பரவியதும் பலர் வியப்பும், சந்தேகமும் கொண்டனர். “ஒரு பெண் 30 வருடம் சிசுவுடன் வாழ முடியுமா?” என சிலர் கேட்டனர்.

மருத்துவர்கள் இதற்கு பதிலளிக்கையில்,

மனித உடல் வெளி பொருட்களை வெளியேற்ற முடியாதபோது அவை தொற்றாக மாறாமல் கல்லாக்கும் இயற்கை தற்காப்பு செயலை மேற்கொள்கிறது என விளக்கியுள்ளனர்.

இதையும் படிங்க: பற்றியெரிகிறது கல்லுண்டாய்! இரவிரவாகப் பெரும் பதற்றம்! சுவாசப் பிரச்சினைகளால் மக்கள் அவதி

Related Posts :

Special News :

Entertainment :

Special News

177d533f-562e-4df3-b574-d98d574432e5
வவுனியாவில் கிணறு ஒன்றில் இருந்து உயர்தர மாணவி சடலமாக மீட்பு!
New Project t (3)
உலகில் உயர்ந்த வாகன விலையை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை!
New Project t
கனடாவில் பொலிசாரால் தேடப்படும் தமிழ் இளைஞன்!
mullaithevu-boy-issue
முல்லைத்தீவு இளைஞனின் சர்ச்சைக்குரிய மரணம்...! பொலிஸ் ஊடக பிரிவினரால் வெளியிடப்பட்ட அறிக்கை
New Project t (4)
முல்லைதீவில் இளைஞன் தாக்கப்பட்டு மரணமடைந்தமை தொடர்பில் NPP யின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட அறிவிப்பு!
mullaithevu
முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞன்: இராணுவத்தினர் மீது அதிரடி நடவடிக்கை. 5 இராணுவத்தினர் கைது