கொடூரமாக கொலை செய்யப்பட்ட 02 பிள்ளைகளின் தாய்

கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரட்டைச் சகோதரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் 38 வயது இரண்டு பிள்ளைகளின் தாய் கடந்த மே மாதம் வெள்ளிக்கிழமை (30) படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

அவரது கழுத்து பகுதியில் தாக்குதல் மேற்கொண்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், 24 நாட்களின் பின்னர் 34 வயதுடைய இரட்டையரான சகோதரிகளை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படுகொலை இடம்பெற்ற வேளை உயிரிழந்த குடும்ப பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிகிறார்.

சம்பவம் நடைபெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கெமராவின் காணொளிகளை சேமிக்கும் கருவி (DVR) கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Minab 168
“மினாப் 168” விமானம் : தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்த ஈரானியர்கள்!
Thaiyiddi
யாழ். தையிட்டி விகாரை காணியை உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை
whatsapp number
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிக்க விசேட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
Vedukkunari Mala
வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடு உருவாகும் - டக்ளஸ் எச்சரிக்கை!
canada
கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: மூவர் கைது
ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்