முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் தனது உத்தியோகபூர்வ குடியிருப்பை விட்டு வெளியேற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, அவர் கொழும்பு அரசாங்க பங்களாவிலிருந்து வெளியேறி ஒரு வாடகை வீட்டிற்கு குடிபெயர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சந்திரிகா பண்டாரநாயக்கவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஏற்பாடுகள் தாமதமாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் ஒருவர் வெளியிட்ட தகவல்கள் மூலம் இவை தெரியவந்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்கும் சட்டமூலம் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியம் தவிர அனைத்து சலுகைகளும் பறிக்கப்பட்டன.
அத்துடன், இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பிறகு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவியின் ஓய்வூதியம் மற்றும் பிற அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.