யாழ்ப்பாணத்தில் பாஸ்போட் வழங்கும் பணி எதிர்வரும் 01-09-2025 ஆம் திகதி முதல் ஆரம்பமாக உள்ளது.
அதற்காகத் தயார்படுத்தப்படும் கட்டிடத்தையே இப் படத்தில் காண்கிறீர்கள்.
யாழ்ப்பாணக் கச்சேரியில் கச்சேரி நல்லூர் வீதியின் பக்கமாகப் பிரத்தியேகமாக இக் கட்டிடப் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மிகவும் மகிழ்ச்சியான செய்தி. பாஸ்போட் நெருக்கடி நிலவிய போது 17-04-2025 ஆம் திகதியன்று உள்ளுராட்சித் தேர்தல் பரப்புரைக்கு வந்த போது ஜனாதிபதியால் அளிக்கப்பட்ட வாக்குறதி பாஸ்போட் நெருக்கடி இல்லாத தற்போது நிறைவேறுகின்றது.
வவுனியாவில் காலை 07 மணிக்கு முதல் வரிசைக்குப் போகும் அனைவருக்கும் பாஸ்போட் கிடைக்கின்றது.
கொழும்பு,பத்திரமுல்லவில் காலை 06 மணி முதல் பிற்பகல் 02 மணி வரை செல்பவர்களுக்குப் பாஸ்போட் கிடைக்கின்றது.

அது போல மாத்தறை, குருநாகல், கண்டி பிராந்திய அலுவலகங்களிலும் பாஸ்போட் வழங்குவது இயல்பு நிலைக்கு வந்து விட்டது.
தற்போது பாஸ்போட் வழங்குவதில் 06 அலுவலகங்கள் வந்து விட்டது.
கிழக்கு மாகாணத்திலும் பாஸ்போட் வழங்கும் பிராந்திய அலுவலகத்தைத் திறக்க வேண்டும். அது போல ஊவா , வட மத்திய மாகாணங்களலும் ஒரு பிராந்திய அலுவலகத்தைத் திறக்க வேண்டும்.
அடுத்த வருடம் அனைத்து மாவட்டச் செயலகங்களிலும் பாஸ்போட், தேசிய அடையாள அட்டை வழங்கும் அலுவலகங்களைத் திறந்து அதிகாரத்தை மக்களது காலடிக்குக் கொண்டு செல்ல வேண்டும்.