இந்தியாவிலிருந்து அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பல் ஒன்று யாழ்ப்பாணம் காங்கேசன் துறையை வந்தடைந்துள்ளது.

இன்று மாலை வரை குறித்த கப்பல், காங்கேசன் துறையில் தரித்து நிற்கும் என துறைமுக அத்தியட்சகர் த.பகீரதன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து புறப்பட்ட குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை ஊடாக காங்கேசன் துறையை வந்தடைந்துள்ளது.
குறித்த கப்பலானது கடந்த 2023 ஆம் ஆண்டு 9 தடவைகளும், 2024ஆம் ஆண்டு 6 தடவைகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.