கனடாவில் வசித்து வரும் இந்திய பெண்மணி கனுபிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாக பரவி வருகிறது. வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு என்பதைக் கனவாகக் கருதும் பலருக்கும் இந்த வீடியோ உண்மை நிலையை வெளிக்கொணருகிறது.
கனுபிரியா வெளியிட்ட வீடியோவில், வெறும் 5 அல்லது 6 இடங்களுக்கான வேலைக்கு நூற்றுக்கணக்கானவர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது காணப்படுகிறது. இது போன்ற போட்டியைக் காட்டிய கனுபிரியா, “இதற்கே தயாராக இல்லாதவர்கள் இந்தியாவிலேயே இருக்கலாம்” என தெரிவித்துள்ளார். அவருடைய இந்த தெளிவான குரல், கனடாவில் வேலை பெறுவதின் சவாலான உண்மை நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இந்த வீடியோ பல நெட்டிசன்களின் அனுபவங்களுடன் ஒத்துபோயுள்ளது. “நான் இருக்கும் நகரத்திலும் இதே நிலைதான்” என்றும், “உண்மையை வெளிப்படுத்தியதற்கு நன்றி” என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோ, கனவான வெளிநாட்டு வாழ்க்கையின் மறுபக்கம் என்ன என்பதை உணர்த்துகிறது. வேலையைப் பெறும் பயணம் சுலபமல்ல. அதற்காக மனதளவிலும் உடலளவிலும் தயாராக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. “இது போன்ற நிலை தெரியாமல் கனடா வந்தால் ஏமாற்றம் தான் என உணர்த்தும் வகையில் இந்த வீடியோ அமைன்துள்ளது.