அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களை மிஹிந்தலை ராஜமகா விஹாரையின் தலைமை விகாராதிபதி வலவாங்குனவேவே தம்மரதன தேரர் விமர்சித்துள்ளார்.

அவை நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய தேரர், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நாட்டை அழிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த நிலைமையை விளக்குவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, தனக்குத் தெரிந்த ஒரு மாணவர் தனிப்பட்ட தொடர்புகள் மூலம் ட்ரம்ப் குடும்பத்தை அணுகிய பின்னரே, இலங்கை மீது அமெரிக்கா விதித்த வரி முன்னர் குறைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
