ஈரானை தாக்கினால் டிரம்ப் ஆட்சியே கவிழுந்துவிடும்!

அமெரிக்காவின் பிரபல அரசியல் விமர்சகர்களும், டிரம்பின் நெருங்கிய நண்பர்களுமான ஸ்டீவ் பேனன் மற்றும் டக்கர் கார்ல்சன் ஆகியோர் இஸ்ரேல்-ஈரான் மோதல் குறித்து கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக டிரம்ப் விடுத்த கருத்துக்களை அவர்கள் விமர்சித்துள்ளனர். அதோடு டிரம்ப் உடனடியாக டெஹ்ரானை காலி செய்யுமாறு ஈரான் நாட்டு மக்களை வலியுறுத்தினார். ஈரான் அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்க வேண்டும். ஈரான் தவறு செய்துவிட்டது. ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாமல் ஈரான் அலைக்கழித்தது தவறானது.

ஈரான் கைக்கு அணு குண்டு செல்ல கூடாது. அவர்கள் அணு ஆயுதத்தை வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மீண்டும் சொல்கிறேன். ஈரான் தலைநகரை காலி செய்யுங்கள். உடனே ஈரான் தலைநகரை விட்டு வெளியேறுங்கள் என்று அவர் மீண்டும் தெரிவித்தார்.

டிரம்பின் இந்த கருத்தையும் டக்கர் கார்ல்சன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இந்த மோதல் தொடங்கியதில் இருந்து, கார்ல்சன் மற்றும் பேனன் அமெரிக்காவின் ஈடுபாட்டை விமர்சித்து வருகின்றனர். War Room என்ற போட்காஸ்டில் பேசிய கார்ல்சன், எனக்கு டிரம்ப் மீது உண்மையான அன்பு உள்ளது. அவர் மிகவும் இரக்கமுள்ள, கனிவான நபர். இதை நான் சொல்வதற்குக் காரணம், என் நாடு இதனால் மேலும் பலவீனமடையும் என்று நான் அஞ்சுகிறேன்.

ஈரானை அமெரிக்கா தாக்கினால். இஸ்ரேல் போரில் அமெரிக்கா தலையிட்டால் அது நம்முடைய வீழ்ச்சியாக மாறும். இதன் அமெரிக்க சாம்ராஜ்யத்தின் முடிவு விரைவில் வரும் என்று நினைக்கிறேன். மற்ற நாடுகள் அதை விரும்புகின்றன. ஈரானின் காரணமாக அமெரிக்கா பலவீனமடைய இது வழியாக அமைந்து விடும். இது டிரம்பின் ஜனாதிபதி பதவியையும் முடிவுக்குக் கொண்டுவரும்.. அமெரிக்காவின் முடிவு. டிரம்பின் முடிவு இதன் மூலம் நடக்கும், என்றார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜி7 மாநாட்டில் டிரம்ப் கருத்து தெரிவித்தார். “டக்கர் கார்ல்சன் என்ன சொல்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. மக்கள் கேட்கும்படி அவர் ஒரு தொலைக்காட்சி நெட்வொர்க்கை பெற்று சொல்லட்டும். பாட் காஸ்டில் பேசுவது எல்லாம் மக்களிடம் செல்லாது” என்று அவர் கிண்டலாக கூறினார்.

அதன் பின்னர் சில மணி நேரங்களிலேயே, டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் கார்ல்சனை சாடினார். “குழப்பமான மனநிலையில் இருக்கும் டக்கர் கார்ல்சனுக்கு இந்த போர் பற்றி யாராவது விளக்க முடியுமா? ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக் கூடாது. ஈரான் அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்க வேண்டும். ஈரான் தவறு செய்துவிட்டது. ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாமல் ஈரான் அலைக்கழித்தது தவறானது.

ஈரான் கைக்கு அணு குண்டு செல்ல கூடாது. அவர்கள் அணு ஆயுதத்தை வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மீண்டும் சொல்கிறேன். ஈரான் தலைநகரை காலி செய்யுங்கள். உடனே ஈரான் தலைநகரை விட்டு வெளியேறுங்கள், என்று டிரம்ப் கோபமாக தெரிவித்தார்.

இதற்கு இடையே ஈரானுடனான இஸ்ரேலின் போரில் அமெரிக்கா இணைவதைத் தடுக்கும் மசோதாவை 8 அமெரிக்க செனட்டர்கள் அறிமுகப்படுத்தி உள்ளனர். இதில் டிரம்ப் ஆதரவு செனட்டர்களே அவருக்கு எதிராக வாக்களிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

டிரம்ப் தனது ஜி7 பயணத்தை ஒருநாள் முன்னதாக முடித்துக்கொண்டு திங்களன்று வாஷிங்டன் திரும்புகிறார் என்று வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தி உள்ளது வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லேவிட் எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் இதுகுறித்து வெளியிட்ட பதிவில், “ஜனாதிபதி டிரம்ப் இன்று இரவு வாஷிங்டன் திரும்புவார். ஏனெனில் அவர் பல முக்கியமான விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை காரணமாக அவர் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறினார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

news
மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன்!
611c7164-847f-4dd5-bc75-86bf7e441f3d
யாழில் அதிகாரிகளின் கவனயீனத்தால் ஏற்படபோகும் உயிராபத்து?
Gu2-vP9XAAADiza
கண் மூடி திறப்பதற்குள் 26,000 அடி சரிந்த விமானம்.. கண்ணீர் விட்டு கதறிய பயணிகள்! திக்திக் சம்பவம்
batticalo
வானிலிருந்து பூமழைபொழிய.. தமிழர் பகுதியில் கேட்ட ஆரோகரா கோசம்
jaffna
கராத்தே சுற்றுப் போட்டியில் யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சாதனை!
vavuniya-train-accident
ஓமந்தையில் புகையிரதம் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: தாயும் மகளும் படுகாயம்