போலி ஆவணங்கள் தயாரித்து வாடகை வாகனங்களை விற்ற இருவர்

வாடகை அடிப்படையில் வாகனங்களை பெற்று அவற்றுக்கு போலியான ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல்மாகாண வடக்கு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கடவத்தை பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் கொழும்பு, அனுராதபுரம், பாணந்துறை உள்ளிட்ட பல பிரதேசங்களில் இந்த மோசடி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர பிரதேசத்தில் மேல் மாகாண வடக்கு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு நேற்றுமுன்தினம் இரவு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இவர்கள் வாடகை அடிப்படையில் வாகனங்களை பெற்று அவற்றின் இலக்கதகடுகளை மாற்றி போலியான ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளமை விசாரணைகளில் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30 மற்றும் 36 வயதுடைய மாளிகாவத்தை மற்றும் ஹொரனை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

23 கிராம் 650 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் போலியான முறையில் தயாரிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் தேசிய அடையாள அட்டைகள் வருமான உறுதிப்பத்திரங்கள் அண்மையில் பதிவு செய்யப்பட்ட இரு வாகன இலக்கதகடுகள் மற்றும் 5 கைத்தொலைபேசிகள் என்பவற்றுடன் சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியொன்றில் பயணித்துக்கொண்டிருந்த போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சந்தேக நபர்கள் அனுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வேன் ஒன்றை வாடகை அடிப்படையில் பெற்று அதனை 104 இலட்சத்துக்கு விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. (எம்.வை.எம்.சியாம் virakesari)

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (3)
பாழடைந்த வீட்டிற்குள் சிக்கிய பல ஆண்டுகள் பழமையான எலும்புகூடு!
hritharan
செம்மணி புதைகுழி தொடர்பில் சிறீதரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
08e7400e-bddb-4a8b-bab8-b633133448c7
புலிகளின் அரசியல் ஆலோசகருக்கு வெளிநாடொன்றின் தலைநகரில் சிலை!
arugambe
மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் கைது!
eggs-thrown-at-devotees-during-rath-yatra-in-canada-india-slams-despicable-attack-demands-action
கனடா இனவெறி கும்பல் அட்டூழியம் : இரத யாத்திரையில் நடந்த அசம்பாவிதம்
c (3)
முதற் தடவையாக 34 மாணவிகள் “9A” சித்திகளை பெற்று சாதனை படைத்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி