தராலி கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளம், உயிரிழப்பு மற்றும் சொத்து சேதத்தால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தராலி கிராமம், பிரசித்தமான ஆன்மிக தலம் கங்கோத்ரிக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 648 மீட்டர் உயரத்தில் அமைந்த இந்த கிராமம், பெரும்பாலும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளால் நிரம்பியிருக்கும் முக்கியமான மலைப்பகுதி.
#Watch: ऋषिकेश से आज एक हैरान करने वाला नजारा देखने को मिला। लगातार हो ही बारिश और धराली में आई त्रासदी के बाद से गंगा नदी का पानी वहां मौजूद भगवान शिव की विशालकाय प्रतिमा के करीब पहुंच गया है। ऋषिकेश में गंगा खतरे के निशान के 340.50 आरएल मीटर के करीब पहुंच गई है।#Rishikesh… pic.twitter.com/lqU43HBcyS
— Hindustan (@Live_Hindustan) August 6, 2025
அந்த பகுதியில் நேற்று பெய்த பெருமழையால், அருகிலுள்ள கீர் கங்கா ஆற்றில் திடீரென பெருவெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளம், மலைப் பகுதியில் இருந்து தராலி கிராமத்துக்குள் புகுந்து வீடுகளும் கட்டிடங்களும் இடிந்து நாசமானது. இதனால் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெள்ளத்தின் தாக்கத்தில், தராலி கிராமத்தில் உள்ள 25 ஓட்டல்கள் மற்றும் ஏராளமான வீடுகள் முழுமையாக அழிந்து விட்டன. வீடுகளில் இருந்தவர்களின் நிலைமை குறித்து இன்னும் தகவல் இல்லை. மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ரிஷிகேஷ் பகுதியில் உள்ள பிரமாண்ட சிவன் சிலையை சுற்றி வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடும் 36 வினாடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் வெள்ளம் 340.50 ரிங்கிட் மீட்டர் அபாய அளவை எட்டியுள்ளதை தெளிவாக காண முடிகிறது. இதைக் கண்ட மக்கள் பயம் மற்றும் பதட்டத்துடன் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.