வெனிசுவேலா மற்றும் அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக ஒரு பெரிய அளவிலான தாக்குதலை அமெரிக்கா, வெற்றிகரமாக நடத்தியுள்ளது என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது சமூகஊடக கணக்கில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் போது, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் பிடிபட்டுத், நாட்டிற்கு வெளியே விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். இது தொடர்பாக இன்று காலை 11.00 மணிக்கு (உள்ளூர் நேரம்) மார்-அ-லாகோவில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும்.
இந்த விடயத்திற்கு நீங்கள் செலுத்திய கவனத்திற்கு நன்றி என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

