“திருகோணமலையிலுள்ள விகாரை முறையாக பதிவு செய்யப்பட்டது” ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்

திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை அமரபுர மகா நிக்காயவின் தலைமை நாயக்க தேரர் கரகொட உயங்கொட மைத்திரி மூர்த்தி தேரர் ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

திருகோணமலையில் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரை 1951 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருவதாகவும், குறித்த விகாரை முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டில் விகாரை அமைந்துள்ள காணியின் உரிமை அப்போதைய ஜனாதிபதியால் வழங்கப்பட்ட மானியப்பத்திரத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவரின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருகோணமலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சம்பவம் கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டும் எனவும் அமரபுர மகாநிக்காயவின் தலைமை தேரர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, இந்த விடயம் தொடர்பில் உடனடியாக ஆராயுமாறும் தலைமை தேரரால் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

vehicles
2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி வரிகளால் மேலதிக வருமானம்!
india
யாழை வந்தடைந்தார் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன்!
passports
வீதியோரத்தில் இருந்து மீட்க்கப்பட்ட கடவுச்சீட்டுகள்!
jaffna university
யாழ். பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் செயல்களில் தலையிட்டதில்லை - ரஜீவன் எம்.பி
maldives
மாலைத்தீவில் கைதான இலங்கையர்கள்: நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல்
jaffna sea
யாழ். தாளையடி கடற்பகுதிக்கு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!