அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இது குறித்த விபரங்களை வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக பகிர்ந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் காலில் ஏற்பட்ட வீக்கத்தை பரிசோதித்ததில் அவருக்கு ‘Chronic Venous Insufficiency’ எனப்படும் நரம்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நோய், உலகளவில் 20ல் ஒருவரை பாதிக்கும் எனவும், கால்களில் இருந்து இதயத்திற்கு இரத்தம் சரியாக திரும்பாததால் இந்த நோய் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Chronic Venous Insufficiency என்பது நரம்புகளில் இரத்தம் தேங்கி, நரம்பு சுவர்களில் அழுத்தம் மற்றும் வீக்கம் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் ஒரு நோய் ஆகும்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு இப்போது 79 வயது ஆவதுடன், அண்மையில் அவர் பங்கேற்ற நிகழ்வின்போது அவரது கணுக்கால் பகுதியில் வீக்கம் இருந்ததும் கையில் ரத்தக்கட்டு போன்ற காயம் இருந்ததும் கவனத்துக்கு வந்தது.
அதை மறைக்கும் வகையில் ஒப்பனை செய்திருந்தார் ட்ரம்ப். இதனால் அவரது உடல்நலன் குறித்த கேள்வி எழுந்த நிலையில் தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.