அகமதாபாத் விமான விபத்தை முன்கூட்டியே கணித்த பெண் பயணி!

அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

242 பேருடன் புறப்பட்ட விமானத்தில், 241 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவரே காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இந்த விமானத்தில் பரோடாவைச் சேர்ந்த 51 வயதான யாஸ்மின் வோரா, அவரது மருமகன் பர்வேஸ் வோரா மற்றும் அவரின் 4 வயது மகள் ஜுவேரியா ஆகியோர் பயணித்துள்ளனர்.

புறப்படும் நேரத்தில், யாஸ்மின் விமானத்தில் ஏசி வேலை செய்யவில்லை என்றும், “ஏதோ சரியில்லையென உணர்கிறேன்” என தனது கணவருக்கு தொலைபேசியில் கூறியிருந்தார். இது சம்பவத்திற்கு சில நிமிடங்கள் முன்பாகவே நடந்ததுள்ளது.

லண்டனில் உள்ள தனது இரண்டு கர்ப்பிணி மருமகள்களை பார்ப்பதற்காக ஜூன் 9ம் திகதி செல்ல திட்டமிட்டிருந்த யாஸ்மின், பின்னர் ஜூன் 12ம் திகதிக்கு பயணத்தை மாற்றியிருந்தார். அதே 9ம் திகதியே சென்றிருந்தால், யாஸ்மின் இந்த உயிரிழப்பு பட்டியலில் இல்லாதிருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

police
பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொண்டுசெல்லப்படும் பொருட்கள்: கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!
namal
நாடாளுமன்றத்தை கூட்டுமாறு நாமல் கோரிக்கை
weather
சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
rain
நாளை முதல் தீவிரமடையும் மழை: வளிமண்டலவியல் திணைக்களம்
flood
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
lightning
பலத்த மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!