பாலியல் தொல்லை கொடுத்த கொடூரனை வீடு புகுந்து வெட்டி எரித்த பெண்கள் – அதிர்ச்சி சம்பவம்

ஒடிசா மாநிலத்தில் நீண்ட காலமாக கிராமப்புறப் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படும் 60 வயது நபர், பாதிக்கப்பட்ட பெண்களின் குழுவினரால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 3ஆம் தேதி இரவு, குற்றச்சாட்டுகளுக்குள்ளான அந்த நபர், தனது வீட்டிலேயே பெண்கள் குழுவினரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலைக்குப் பின்னர், அவரது உடல் எரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, பொலிஸார் நடத்திய விசாரணையில் 8 பெண்கள் உட்பட மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்களில் ஆறுபேர், தாங்களும் அந்த நபரால் பாலியல் தொல்லைக்குள்ளானவர்கள் என ஒப்புக்கொண்டுள்ளனர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக, பல்வேறு கிராமங்களில் உள்ள பெண்களுக்கு அந்த நபர் தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்ததாக கூறப்படுகிறது. பலமுறை எச்சரிக்கையைக் கூறியும், அவர் தனது செயல்களை நிறுத்தவில்லை என பெண்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் உடலின் எஞ்சிய பாகங்களை மீட்டு, மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நபருக்கு எதிராக இதற்கு முன் எந்தவிதமான புகாரும் அளிக்கப்படவில்லை என்றும், தற்போது வழக்குப்பதிவு செய்து சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதாயும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!