கட்சிப் பதவிகளைத் துறந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்!

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள உள்ளூர் அதிகாரசபைகளுக்கான இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தியினால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கட்சிப் பதவிகளிலிருந்து விலகியுள்ளதாக அறியமுடிகின்றது.

அந்த வகையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்டக் கிளைச் செயலாளர் மற்றும், கரைதுறைப்பற்று பிரதேசக் கிளைத் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்தே நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் இவ்வாறு பதவி விலகியுள்ளதாக அறியமுடிகின்றது.

அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தாம் கட்சிப்பதவிகளிலிருந்து விலகும் இந்த முடிவை கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், கட்சியின் நிர்வாகச் செயலாளர் சேவியர் குலநாயகம் ஆகியோருக்கு 24.06.2025ஆம் திகதிய கடிதத்தின் மூலம் அறிவித்திருப்பதாகவும் மேலும் அறியக்கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran
ஹோர்முஸ் நீரிணையில் கொள்கலன் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை துப்பாக்கிச் சூடு!
Suresh Saleh
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சுரேஷ் சலே நீதிமன்றில் ஆஜர்!
iran
தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும்: அமெரிக்காவிற்கு ஈரான் ராணுவம் பகிரங்க எச்சரிக்கை
suriya movie shoot
கொழும்பில் படமாக்கப்படவிருந்த இந்தியத் திரைப்படத்தில் சூர்யாவுடன் நடிக்கவிருந்த இலங்கை கலைஞர் திடீரென உயிரிழப்பு!
MT Tifani
இலங்கை கடற்பரப்புக்கு அப்பால் ஈரான் ஆதரவு கப்பல் இடைமறிப்பு: அமெரிக்கப் படைகள் அதிரடி சோதனை!
vavuniya
வவுனியாவில் இளைஞர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்ட குழு: பொலிசார் தீவிர விசாரணை!