🔴 VIDEO செம்மணி போராட்டத்தை குழப்ப கிளிநொச்சியில் இருந்து அழைக்கப்பட்ட விஷமிகள்: இளங்குமரன் எம்.பி

செம்மணியில் மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் நியாயமானதும் அவர்களின் உரிமையை பெறுவதற்குமான போராட்டமாகவே அமைந்திருந்தது. இதனை குழப்பும் வகையில் கிளிநொச்சியில் இருந்து தனியார் பேருந்து ஒன்றில் அழைக்கப்பட்ட பத்துக்கு மேற்பட்ட விஷமிகளாலேயே அங்கு பெரும் பதற்ற நிலையும் அச்ச நிலைமையும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசியல் இலாபங்களை பெறுவதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கிளிநொச்சியில் கள்ளகாணி பிடிப்பவரும், பார் போமிட் பெறுவதற்கு விண்ணப்பித்து விட்டு இருப்பவரும், வட்டிக்கு பணம் கொடுப்பவர்களுமே அங்கு பதற்ற நிலையை தோற்றுவித்துள்ளார்கள்.

இவ்வாறானவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை மிக விரைவில் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran
ஹோர்முஸ் நீரிணையில் கொள்கலன் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை துப்பாக்கிச் சூடு!
Suresh Saleh
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சுரேஷ் சலே நீதிமன்றில் ஆஜர்!
iran
தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும்: அமெரிக்காவிற்கு ஈரான் ராணுவம் பகிரங்க எச்சரிக்கை
suriya movie shoot
கொழும்பில் படமாக்கப்படவிருந்த இந்தியத் திரைப்படத்தில் சூர்யாவுடன் நடிக்கவிருந்த இலங்கை கலைஞர் திடீரென உயிரிழப்பு!
MT Tifani
இலங்கை கடற்பரப்புக்கு அப்பால் ஈரான் ஆதரவு கப்பல் இடைமறிப்பு: அமெரிக்கப் படைகள் அதிரடி சோதனை!
vavuniya
வவுனியாவில் இளைஞர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்ட குழு: பொலிசார் தீவிர விசாரணை!