இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் ஆகியோரின் மரணம் தொடர்பான முறைப்பாடு கொழும்பில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் உள்ள சட்டப் பிரிவு துணை ஆய்வாளர் (டி.ஐ.ஜி) அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தனுக ரணஞ்சக கஹந்தகமகே எனும் சட்டத்தரணியால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இது குறித்து அறிவிப்பை சட்டத்தரணி தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
🔴 Public Update on the Isaipriya,Balachandran Case. I am writing to inform the public that my formal complaint…
Posted by Dhanuka Rananjaka Kahandagamage on Sunday, June 29, 2025
அந்தப் பதிவில் முறைப்பாட்டு இலக்கம் மற்றம் முறைப்பாட்டின் தற்போதைய நிலை என்பவற்றையும் வெளிப்படுத்தியுள்ளார்.இந்த விவகாரம் அதிகாரப்பூர்வ சட்ட வழிகள் மூலம் முறையாக விசாரிக்கப்படுவதையும், புறக்கணிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதே எனது முன்னுரிமை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதிகாரிகள் உடனடியாகவும் முழுமையாகவும் தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர், இந்த வழக்கு முன்னேறும்போது தொடர்ச்சியான ஆதரவு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் சரணடைந்த இசைப்பிரியா பாலச்சந்திரன் உட்பட பலர் கொல்லப்பட்டமை குறித்த போர் குற்றச்சாட்டு விசாரணைகளை கோரி குறித்த சட்டத்தரணி பொலிஸ் மா அதிபருக்கு மனுவொன்றை சமர்ப்பித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
