பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.
இதையடுத்து இவ்விரு அணிகள் முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 49.2 ஓவர்கள் முடிவில் 244 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து களமிறங்கிய பங்களாதேஷ் அணி 167 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 77 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.
இந்நிலையில், இப்போட்டியின்போது கொழும்பு மைதானத்திற்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. பின்னர் மைதானத்தில் இருந்து பாம்பு அகற்றப்பட்டதும் மீண்டும் ஆட்டம் நடைபெற்றது.