குருநாகல் பகுதியில், ஒடிக்கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்தின் காலடிப் பலகையில் (footboard) நின்று பயணித்த ஒரு பாடசாலை மாணவன் திடீரென தவறி கீழே விழும் சோகமான சம்பவம் நடந்துள்ளது.
அந்த தருணத்தில் அருகில் சென்ற ஒரு வாகனத்தின் டாஷ்போர்டு கேமராவில் இந்த சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தைப் பார்த்தவர்கள் உடனே உதவி செய்ததால் மாணவனுக்கு பெரிதாக விபத்து ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும், பேரூந்தில் பயணிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது.