கொழும்பின் புறநகர் பகுதிகளான ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளுக்கு நேற்று இரவு இராணுவத்தினரும் பொலிஸாரும் அவசரமாக அழைக்கப்பட்டுள்ளார்.

3 ஆம் திகதி, ராகம மற்றும் கந்தானை பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளார்.
இதன் காரணமாக குறித்த பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவசர சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ள இராணுவத்தினரும் பொலிஸாரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, நேற்று இரவு ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளில் இராணுவத்தினர், கடற்படையினர், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் மக்களை சோதனை செய்துள்ளனர்.