வெளிநாடொன்றில் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் தீ விபத்து!

இஸ்ரேலில் விவசாய வேலைகளில் ஈடுபட்டிருந்த இலங்கையர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து, தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்த சம்பவம் இஸ்ரேலின் கிரியாட் மலாச்சி பகுதிக்கு அருகே நேற்று இடம்பெற்றுள்ளது.

பேருந்து தீப்பிடித்த போது அதில் இலங்கையை சேர்ந்த 20 இளைஞர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வாகனம் தீப்பிடித்த போது கதவு வேலை செய்யாததால், வாகனத்தில் இருந்தவர்கள் வாகனத்தின் ஜன்னல்களை உடைத்து வெளியேறியதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டாரா தெரிவித்தார்.

இந்த அனர்த்தம் காரணமாக ஒரு இளைஞர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் முற்றிலுமாக எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்பட்டது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Archchuna
முழு இலங்கையையும் தமிழகத்திற்கு கொடுங்கள்: சபையில் அர்ச்சுனா எம்.பி
anura kumara
ஜனாதிபதி நாளை மட்டக்களப்பிற்கு விஜயம்: விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தீவிரம்
jaffna
யாழ். பொலிஸ் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு!
Kapila Chandrasena
கபில சந்திரசேனவின் மரணம்: வீட்டின் சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகவில்லை என தகவல்!
QR
எரிபொருள் QR குறியீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
uk
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்