🔴 PHOTO நல்லூர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார் பிரதமர்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (03) நல்லூர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் சனிக்கிழமை (02) விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் , யாழில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் இன்றைய தினம் காலை நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.

நல்லூர் ஆலய மகோற்சவ திருவிழாவின் 6ஆம் திருவிழா இன்றைய தினம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பிலான தெளிவூட்டல் கலந்துரையாடல் பிரதமர் தலைமையில் வடக்கில் !

கல்விச்சீர்திருத்தம் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் எட்டாவது அமர்வு வடக்கு மாகாணத்தில் நேற்று வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

குறித்த புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பிலான தெளிவூட்டல் கலந்துரையாடலானது பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரினி அமர்சூரிய தலைமையில் நடைபெற்றது.

இலங்கை கல்விச் சீர்திருத்த ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண செயலாளரின் அலுவலகத்தில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில்கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் சந்திரசேகரன், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுபோவ, வடக்கின் பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், வடக்கின் ஆளுனர் வேதநாயகன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சன், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், கல்விப்புலம் சார் அதிகாரிகள் புத்திஜீவிகள் என பலரது பங்குபற்றுதலுடன் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

2026 ஆம் ஆண்டுமுதல் நாட்டின் கல்வி முறையில் குறிப்பாக பாடசாலைக் கல்விமுறையில் மாற்றத்தைக் கொண்டுவரும் முகமாக கல்விச் சமூகத்தின் கருத்துக்களை பெற்றுக் கொள்ளும் வகையில் நடைபெறும் கலந்துரையாடல்களின் ஓர் அங்கமாகவே இந்த கலந்துரையாடலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

school
பாடசாலையில் மாணவனின் அடாவடியால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!
New Project t (5)
110 வயதான இலங்கையின் மிக வயதான நபர்!
New Project t (3)
பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
New Project t (2)
நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!
New Project t (27)
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
New Project t (26)
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!