பிறந்த நாளன்று பறிபோன இளைஞனின் உயிர்: இலங்கையில் நடந்த சோகம்

இராகலை – நுவரெலியா பிரதான வீதியில் உள்ள ஹாவா – எலிய காட்டுச் சந்தியில் நேற்று(21) இரவு அதிவேகமாக வந்த பாரவூர்தி ஒன்று, உந்துருளியில் மோதியதில் உந்துருளி ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த உந்துருளி ஓட்டுநர் ஹாவா – எலிய பகுதியைச் சேர்ந்த மானெத் அபூர்வா என்பவர் ஆவார்.

தனது வீட்டிலிருந்து நுவரெலியா நோக்கி உந்துருளியில் சென்று கொண்டிருந்த இளைஞர், காட்டுச் சந்தியிலிருந்து நுவரெலியா நகருக்குள் நுழைந்தபோது, ​​இராகலையிலிருந்து நுவரெலியா நோக்கி வேகமாகச் சென்ற பாரவூர்தி, மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பாரவூர்தியின் ஓட்டுநர் சந்தேகத்தின் பேரில் நுவரெலியா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்த இளைஞனின் 21ஆவது பிறந்தநாள் இன்று(22) என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

school
பாடசாலையில் மாணவனின் அடாவடியால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!
New Project t (5)
110 வயதான இலங்கையின் மிக வயதான நபர்!
New Project t (3)
பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
New Project t (2)
நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!
New Project t (27)
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
New Project t (26)
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!