யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (29) காலை அவர் வாக்குமூலம் அளிப்பதற்காக கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில், இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற போராட்டமொன்றில் கலந்து கொண்ட பின்னர், கோட்டை காவல் நிலையத்தில் ஒரு காவல் அதிகாரியின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
அந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை சென்றிருந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டார்.