இன்று முதல் ஆரம்பமான கட்டுநாயக்க – கொழும்பு இடையேயான விமான சேவை!

கொழும்பு பேர ஏரிக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையில் விமான சேவை இன்று அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பேர ஏரியை விமான தளமாகக் கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் கொழும்பிற்கும் இடையில் இந்த விமான சேவை முன்னெடுக்கப்பட உள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுக மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்தப் புதிய சேவை சினமன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுகின்றது.

தொடக்கப் பயணமாக செஸ்னா 208 விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, கொழும்பு சினமன் லேக்சைடு இறங்குதளத்தை சென்றடைந்தது.

இந்த முதல் பயணத்தில், துறைமுக மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதிஅமைச்சர் ஜனிதா ருவான் கொடிதுவாக்கு, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க, சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் சுனில் ஜயரத்ன, மற்றும் பல்வேறு சிறப்பு அதிதிகள் பங்கேற்றனர்.

வர்த்தகர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பிற்கு பயணம் செய்வதற்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்த சேவை பயனளிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

நீரில் தரையிறக்கக்கூடிய இலகு ரக விமானங்கள் இந்த சேவைக்காக பயன்படுத்தப்பட உள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

school
பாடசாலையில் மாணவனின் அடாவடியால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!
New Project t (5)
110 வயதான இலங்கையின் மிக வயதான நபர்!
New Project t (3)
பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
New Project t (2)
நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!
New Project t (27)
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
New Project t (26)
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!