பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற வளாகமொன்றில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்தில் இன்றையதினம் (11.11.2025) தற்கொலை குண்டுதாரியால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, 21 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொல்லப்பட்டவர்களிலும் காயமடைந்தவர்களிலும் பெரும்பாலானோர் சட்டத்தரணிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்குள் பொருத்தப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டரால் இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
